அதிபர் செய்தி
திரு.எம்.கலிராசா (SLPS III) (B.A PGDE,PGDEM)
இயற்கை அழகுமிக்க திருகோணமலை நகரில் சிறப்புற விளங்கும் பாடசாலைகளுள் எமது தி/தி விபுலானந்தாக் கல்லூரியும் ஒன்றாகும். பல் சமூக கலாசார மாணவர்களை கொண்ட இப்பாடசாலை எந்த வேறுபாடுகளும் இன்றி தனது பணியினை முன்னெடுத்தும் வருகின்றது. தேசிய மட்டம் பரீட்சைகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் வருடா வருடம் பல மாணவர்கள் தமது சாதனைகளை படைத்து கல்லூரியின் பெருமையினை வெளியுலகிட்கு எடுத்துக்காட்டியும் வருகின்றார்கள். நவீன கால தேவையினை கருத்திற்கொண்டு நாட்டின் பிரஜைகளை உருவாக்கும் நோக்குடன் அரசு முன்னெடுக்கும் சகல விதமான செயற்பாடுகளையும் எமது கல்லூரி முன்னிச்சை செயற்படுத்தி சாதனை புரிந்துவருகின்றது. பல்வேறு மாற்றங்களை காலத்திற்குக்காலம் முன்னெடுக்கும் எமது கல்லூரி நவீன உலகின் போக்கிற்கு இணங்க தமது தரவுத்தளத்தினை விரிவுபடுத்தி பாடசாலை தொடர்பான தகவல்களை பாதுகாப்பதோடு ஏனையவர்களுக்கும் பரிமாறும் நோக்குடன் வலைத்தளம்[Website] ஒன்றை தமது பெயரில் உருவாக்கும் புதிய முயற்சி கல்லூரி வளர்ச்சி பாதையின் மற்றுமோர் மைல் கல்லாகும். இந்த வகையில் எல்லாவற்றிலும் வீறுநடையுடன் சாதனைபுரியும் கல்லூரி இனிவரும் காலத்திலும் இவ்வாறான புதிய முயற்சிகள் ஊடாக புதிய சாதனைகளை புரிந்து பாடசாலை சமூகத்திக்கும் நாட்டிற்கும் பெருந்துணையாக இருக்க எனது இதயபூர்வமான வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு.எம்.கலிராசா (SLPS III) (B.A PGDE,PGDEM)
அதிபர்
தி/விபுலானந்தா கல்லூரி.






