தி/விபுலானந்தா கல்லூரி

வரலாறு

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி - 2025

WhatsApp Image 2025-02-12 at 11.04.23 PM.jpg
WhatsAppImage2023-02-27at084143.jpeg
History (Sample)

"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருகோணமலை தலத்தாறு கோபுர" என அருணகிரிநாதரால் புகழ்ந்து பாடப்பெற்ற சிறப்பினையுடைய தென்கைலாயத்தைக் கொண்ட திருமலை நகரின் மேற்கு வாயிலில் கம்பீரமான உயர்ந்து நிற்கும் விபுலானந்த கல்லூரியே நான். என்னுடைய கடந்தகால பதிவுகளை இரைமீட்டு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் புளகாங்கிதமடைகிறேன்.  

அன்னசத்திரம் வைத்தல் போன்ற பல தர்மகாரியங்கள் செய்வதிலும் உயர்வானது. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்னும் உயரிய சிந்தனையைக் கருத்திற்கொண்டே திரு.V. கதிரித்தம்பி என்னும் மதான் என்னை ஸ்தாபித்தார். 1947.05.07ம் திகதி அன்று 26 இந்துமாணவர்களுடன் கைவிடப்பட்ட பிரித்தானிய இராணுவ முகாமில் நான் ஆரம்பிக்கப்பட்டேன் என் ஸ்தாபகர் திரு.V. கதிரித்தம்பி அவர்களோடு ஊர்ப்பெரியார்களும் என்று நோற்றத்திற்குக் கைகொடுத்து உதவினா என்னகத்தே கல்வி பயின்ற மாவைக ளுக்கு கற்பித்த ஆசான்களுள் செல்லம்மா ஆசிரியையினை மறக்க முடியாது. சிறந்த கலவியினையும் ஒழுக்கத்தினையும் மாணவர்கள் முறையாகப் பெற்றனர். இக்காலப்பகுதியில் திருக்கோணமலை அதக வித்தியாலயம் என்ற நாமத்தைப் பெற்றேன். 01.10.1947வரை திருV கதிரித்தம்பி அவர்களின் சேவையினை நானும் என்னுடைய மாணவ மணிகளும் பெற்றுப் பயனடைந்தோசம்.

 பின்பு 11.10.1947 திரு.K. வேலுப்பிள்ளை என்னும் அதிபர் என்னைப் பொறுப்பேற்று தன்னுடைய   சிறந்த சேவையினை வழங்கினார். தற்போது உள்ள தரம் 11ஐச் சேர்ந்த மாணவர்களுடைய   வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடமே அப்போது இருந்தது. அக்கட்டிடத்திற்கு முன்னால் உள்ள   அறையே (வழிகாட்டல் சேவை) அதிபர் காரியாலயமாக இருந்தது. இக்காலப்பகுதியில் ஏற்பட்ட   பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட என்னருமை மாணவச்செல்வங்களுக்கு என்னகத்தே   கஞ்சிகாய்ச்சி வழங்கப்பட்டது. இதனால் தி/கஞ்சிமடம் அரசினர் தமிழ்கலவன் வித்தியாலயம்   என்ற காரணப்பெயருடன் கூடிய நாமத்தைப் பெற்றேன். மாணவர்களின் அறிவுப்பசியையும்   வயிற்றுப்பசியையும் தீர்ப்பதில் நான் பங்காற்றினேன். திரு.K.வேலுப்பிள்ளை அதிபர்   அவர்களின் காலத்திலும் நான் குறிப்பிட்டளவு வளர்ச்சி கண்டேன்.

 02.09.1955 இல் திரு V. சுப்பிரமணியம் என்னும் அதிபர் என்னைப் பொறுப்பேற்றுக் கொண்டார்   இக்காலப் பகுதியில் மாணவர்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்கென மத்தியில் ஓர்   கிணறு அமைக்கப்பட்டது. மலசலகூடவசதியும் சிறிதளவு செய்து கொடுக்கப்பட்டது. திரு V சுப்பிரமணியம் அவர்களின் சேவையை 31.06.1956 வரையுமே நானும் எனது மாணவர்களும் பெற்றுக்கொண்டோம்.

01.07.1956 தொடக்கம் 30.01.1964 வரை திருC. அருளானந்தசிவம் என்னும் அதிபர் தனது சிறப்பான சேவையை எமக்காக ஆற்றினார்.